BouquetOfStories-02
கதைக் கொத்து (Madurai Project)

சி. சுப்ரமணிய பாரதி .
By Bharathiyar
Bharathiayar Stories
Madurai Project. Stories in Tamil
Translation: Veeraswamy Krishnaraj
10. அபயம் 10. Fearlessness
10. அபயம்
1) காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருடம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்யக்ஷமாகி, "உமக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார்கள். "நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்" என்று வாமதேவரிஷி சொன்னார். அந்தப்படியே வரம் கொடுத்து விட்டுப் பார்வதி பரமேசுவரர் அந்தர்த்தனமாய் விட்டனர்.
1. Rishi Vāmadevar did Tapas in the forest, eating only herbs. One day Parvati and Paramesvarar appeared before him and asked him, ''What boon will you like to have?'' The Rishi said, ''I should not die at any time.''  After conferring the boon on the Rishi, Parvati and Siva disappeared.
2) அந்த வரத்தை வாங்கிக் கொண்டு வாமதேவ ரிஷி காசி நகரத்தில் கங்காநதி தீரத்தில் ஒரு குடிசை கட்டிக் கொண்டு அங்கே குடியிருந்தார். அவரிடத்தில் காசிராஜன் வந்து தனக்கு ஆத்ம ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டான். 2. Having been blessed with the boon, Vāmadeva Rishi lived in a hut on the banks of the Ganges River. Kāsirājan came to him and requested him to teach him Ātma Jñāṇam (knowledge of self).
3) அப்போது வாமதேவர் சொல்கிறார்: "ராஜனே, எப்போதும் பயப்படாமல் இரு; பயமில்லாத நிலைமையே தெய்வம். பயத்தை விட்டவன் தெய்வத்தைக் காண்பான்" என்றார் 3. Vāmadevar said to him, ''Always remain fearless. Fearlessness is Divineness. He who gave up fear will witness God.''
4) இது கேட்டுக் காசிராஜன் சொல்லுகிறான்: "முனிவரே, நான் ஏற்கெனவே பூமண்டலாதிபதியாக வாழ்கிறேன், எனக்கு எதிலும் பயமில்லை" என்றான். 4. After listening to the Rishi, Kāsirājan said, Muni! I am already the Lord of the earth. I have no fear of anything.''
5) வாமதேவர்: "நீ பூமி முழுவதையும் ஆளவில்லை. உன்னைவிடப் பெரிய மன்னர் பூமியில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் எவராவது உன்மீது படையெடுத்து வந்தால் நீ நடுங்கிப் போவாய். மேலும் இந்த நிலையில் நீ உனது பத்தினிக்குப் பயப்படுகிறாய். மந்திரிகளுக்குப் பயப்படுகிறாய். வேலைக்காரருக்குப் பயப்படுகிறாய். குடிகளுக்கெல்லாம் பயப்படுகிறாய். விஷ ஜந்துகளுக்குப் பயப்படுகிறாய். மரணத்துக்குப் பயப்படுகிறாய். நீ பயமில்லை என்று சொல்வது எனக்கு நகைப்பை உண்டாக்குகிறது" என்றார். 5. Vāmadevar: ''You are not what you say you are. Several kings higher than you live on this earth. If any of them invade your country, you will tremble with fear. Moreover, you are in fear of your wife, ministers, servants, subjects, poisonous creatures, and death itself. Your claim to fearlessness gives me laughter.''
6) இதைக் கேட்டு காசிராஜன்: "இவ்விதமான பயங்கள் தீர்வதற்கு வழியுண்டோ?" என்று வினவினான்.

அதற்கு வாமதேவர் சொல்லுகிறார்: "அடே ராஜா, நீ மூடன்" என்றார்.

காசிராஜா அவரைக் கையிலே ஒரு அடி அடித்தான்.

அப்போது வாமதேவர்: "அடே ராஜா, நீ எத்தனை அடி அடித்தபோதிலும் மூடன்தான்" என்று சொன்னார். காசிராஜன் தலை தெரியாமல் கோபப்பட்டு வாமதேவர் கையிலிருந்த வேத புஸ்தகத்தை வாங்கிக் கிழித்துப் போட்டான்.

6. Kāsirajan: ''Is there a way out of this kind of fear?''

 

Vāmadevar: '' Hey king, you are an ignoramus.''

 

Kāsirajan hit the Rishi with his hand.

 

Vāmadevar: ''Ade Raja! However, many blows you unleash on me, you are an ignoramus.'' Kāsirajan, in a fit of anger, grabbed the book from the Rishi and tore it up into pieces.

7) அப்போது வாமதேவர்: "அடே ராஜா, வேதத்தைக் கிழித்தாய். இதற்குத் தெய்வத்தின் தண்டனை உண்டாகலாம்" என்று சொன்னார்.

அதற்குக் காசிராஜா, "ஏ வேதரிஷீ, தெய்வத்துக்குக் கண் உண்டு. அறியாமல் செய்த குற்றத்துக்குத் தண்டனை இல்லை. நான் வேத நூல் என்பதைப் பார்க்கவில்லை. அடித்தும் பயன்படாத உன்னை என்ன செய்வதென்று தெரியாமல் கோபாக்கிராந்தனாய் அஞ்ஞானத்திலே செய்தேன். என்னைத் தெய்வம் மன்னிக்கும் உனக்கும் மன்னிப்புண்டாகுக" என்றான்.

 7. Vāmadevar: Ade Raja! You tore up the Vedas. For that infraction, a divine punishment may be in the offing.  

Kāsiraja: ''Hey Vedarishi! God has eyes and does not dispense punishment for the commission of unintentional crimes. I have not seen or read the Vedas. Hitting you was pointless, but not knowing what to do, I hit you in a state of ignorance and rage. God will forgive me. may forgiveness be upon you too.'

8) அப்போது வாமதேவர், "அடே ராஜா, நீ நம்முடைய சிஷ்யனாகத் தகும். கோபம் வருவது க்ஷத்திரியகுணம்; அதே க்ஷத்திரிய தர்மம், அதைக் கைவிடாதே. இதற்கு மேல் மற்றொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். நமக்கு இந்த உலகம் கடுகு மாத்திரம். உலகம் சின்னக்கடுகு. அதற்கு வெளிப்புறத்திலே நாம் நின்று அதனை நாம் பார்வையிடுகிறோம். நாம் நிற்பது பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலே. பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலேயே இருப்பவன் பிராம்மணன். இந்தக் கொள்கையை நீயும் கூடியவரை அனுசரித்தால் உனக்கும் நன்மையுண்டாகும். இந்தச் சமயம் உனக்கு நாம் அபயம் கொடுத்தோம். நமக்குப் பார்வதி-பரமேசுபரர் சாகாதவரம் கொடுத்திருக்கிறார்கள். அதில் உனக்கும் வாகம் கொடுத்தோம். ஏனென்றால் அது வற்றாத அமிர்தம். இனிமேல் பிராம்மணர்களை அவசரப்பட்டு அடிக்காதே; சௌக்கியமாக அமிர்தமுண்டிரு" என்று சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பெரியவர் என்னிடம் ஒரு கதை சொன்னார். 8. Vāmadevar: ''Ade Raja! You are fit to be my pupil. Getting angry is the quality of a Kshatriya (warrior). That is the Kshatriya Dharma. Please do not give it up. Let me tell you something else. For us, this world is like a mustard seed. We stand outside of it and look at it. We stand equal to God.  (சாயுச்சியம் cāyucciyam , n. sāyujya. = Equality or intimate union with God) The Brahmana holds Equality with God. If you maintain this position, good things will happen to you. This time, We give you refuge. Parvati and Siva gave me a deathless life. You can partake of the limitless Amirtha. Hereafter, do not hit Brahmanas in haste. Stay well imbibing the ambrosia.''
   

 

 

11. மழை 11.The Rain
1)ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். 1. The ocean makes the OM sound; the wind blows in circles; a cloud of sand rises; the sky turns dark; the clouds are enveloping; the seaside visitors disperse and go home.
2) நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம். 2. Ramarayar, Venu Mudhali, Teacher Brahmaraya Aiyar, a few others, and I were sitting on the beach sand conversing. The lightning intensified. It was around 7 PM.
3) "நாமும் எழுந்து வீட்டுக்குப் போக வேண்டியதுதான்" என்று பிரமராய அய்யர் சொன்னார்.
வேணு முதலியார் பாடுகிறார்:
காற்றடிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே
தூற்றல் கதவு, சாளரமெல்லாம் window
தொளைத் தடிக்குது கூடத்திலே-மழை hall, large room
தொளைத் தடிக்குது கூடத்திலே.
"பாட்டெல்லாம் சரிதான், ஆனால் மழை பெய்யாது' என்று ராமராயர் மற்றொரு முறை வற்புறுத்திச் சொன்னார்.
"பந்தயம் என்ன போடுகிறீர்?" என்று பிரமராய அய்யர் கேட்டார்.
3. Aiyar said, "It is time we all go home."
Venu Mudhaliyar sings,
The wind is blowing; the ocean is rising
Keep your eyes open, Nayaka
Drizzle, at the door, the windows
Blowing hard into the hall.
Ramarayar: ''Poem is fine. But there will not be any rain."
Brahma Aiyar: "You want to bet."
4)"மழை பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன்: அதாவது, இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் மழை பெய்யாது என்று நான் சொல்லுகிறேன்; பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுப்பேன், பெய்யாவிட்டால் நீர் நமக்குப் பத்து ரூபாய் கொடுப்பீரா?" என்று ராமராயர் சொன்னார். 4. Ramarayar:" If it rains, I will give you Rs.10.00. There will not be any rain in the next two hours. That is what I am saying. If it does not rain, will you give me Rs.10.00?"
5) பிரமராயர், "சரி" யென்றார். அப்போது என் தோள் மேலே ஒரு தூற்றல் சொட்டென்று விழுந்தது. நான் "தூற்றல் போடுகிறது" என்று சொன்னேன். "இல்லை" யென்று ராமராயர் சொன்னார். "என் மேல் ஒரு தூற்றல் விழுந்தது" என்று சொன்னேன். அதற்கு ராமராயர், "அலையிலிருந்து ஒரு திவலை காற்றிலே வந்து பட்டிருக்கும். அது மழைத் தூற்றலன்று" என்றார். "சரி" என்று சும்மா இருந்து விட்டேன். 5. Brahma Aiyar said, ''I will.'' Then I felt a drop of rain on my shoulder. I said, "It is raining." Ramarayar said, "There is no rain. 'I said, 'I felt a raindrop on my shoulder." Ramarayar: "It is the drop blown from the ocean wave. It is not a rainfall." I just kept quiet.
6) "என் மேலே ஒரு தூற்றல் விழுந்தது" என்று பிரமராய அய்யர் கூவினார்.
"இதுவும் அலையிலிருந்துதான் வந்திருக்கும்" என்று ராமராயர் சொன்னார்.
"அதெப்படித் தெரியும்?" என்று பிரமராய அய்யர் சொல்வதற்குள்ளாகவே தூற்றல் பத்துப் பன்னிரண்டு எல்லார் தலையிலும் விழுந்தது.
"ராமராயருக்குப் பந்தயம் தோற்றுப் போய்விட்டது" என்று நான் சொன்னேன்.
"இல்லை. இது தூற்றல். நான் சிறு தூற்றல் கூடப் போடாதென்று சொல்லவில்லை. மழை பெய்யாதென்று சொன்னேன். சிறு தூற்றல் மழையாக மாட்டாது. இன்னும் இரண்டு மணி நேரம் இங்கே இருக்கலாம். அதுவரை மழைபெய்யாது என்று நிச்சயமாக இப்போதும் சொல்லுகிறேன்" என்று ராமராயர் சித்தாந்தம் செய்தார். வானம் அதிகமாகக் கறுத்துவிட்டது. இருள் கக்கிக் கொண்டு மேகத்திரள் யானைத்திரள் போலவே தலைமீது போகலாயிற்று. தூற்றல் போடவில்லை. நின்றுபோய் விட்டது. ஆனால் இருள் மேன்மேலும் அதிகப்படுகிறது.
6. Bramaraya Aiyar felt a drop of rain on him and claimed it must have the drop from the ocean wave.
Ramarayar said, "This too must have come for the ocean wave.
Brahmaraya Aiyar: "How do you know?"
By this time, the raindrops fell on the heads of all the people.
I said, '' Ramarayar lost the bet.''
Ramarayar insisted and said, "No. I never said that a drizzle is impossible. For two hours, we can remain here. I insist that it will not rain at all." The clouds rolled in and darkened the sky, moving like an elephant overhead. The sky darkened further with no rain. The drizzle fizzled out, and the darkness deepened.
7. அப்போது நான் சொன்னேன்: "மழை பெய்தாலும் சரி, பெய்யாவிட்டாலும் சரி. நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்" என்று சொல்லி எழுந்தேன்.
"தாங்கள் முதலாவது போங்கள். நானும் பிரமராய அய்யரும் இங்கே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருகிறோம்" என்று ராமராயர் சொன்னார்.
சரியென்று சொல்லி நானும் வேணு முதலியாரும் புறப்பட்டோம். மற்றவர்கள் அத்தனை பேரும் பந்தய விஷயத்திலேயே கவனமாக அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் புறப்பட்டு நூறடி தூரம் வருமுன்னாகவே மழைத் தூற்றல் வலுக்கத் தொடங்கிற்று. கொஞ்சம் ஓடிக் கடற் பாலத்தருகே சுங்கச்சாவடியில் போய் ஒதுங்கினோம். மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும் குடல் தெறிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியாரும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.
மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்...
மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சிநேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை இடிபோலே கர்ஜனை செய்வதை யொட்டி. அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார். ராமராயருக்கும் மனத்துக்குள்ளே பயம். வெளிக்குப் பயத்தைக் காட்டினால் அவமானம் என்பது ராமராயருடைய கொள்கை! ஆதலால் அவர் வேஷ்டியைப் பிழிந்து தாடியைத் துவட்டிக் கொண்டு "ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று சொல்லத் தலைப்பட்டார்.
7. I rose as I said, "Whether it rains or not, we should leave here." Ramarayar said, "You go first. Brahmaraya Aiyar and I will leave a little while later."
Venu Mudaliar and I left the beach. The rest were watching beachball play. We might have walked one hundred feet, and the drizzle intensified into the rain. We ran and took shelter in the Customs Office. The rain became a downpour. Ramarayar, Brahmaraya Aiyar, and others ran so hard that they shook their entrails. They reached us. Venu Mudaliar and I were wet. Others were as wet as the soaking pickles. There was a roaring rain with thunder and lightning of many formations.
As the lightning flashed and blinded us for the moment. The thunder was out of the world and was like the roaring and throaty rumble of Brahmaraya Aiyar. The raised platform – Thinnai- where he talks every evening carried the moniker Thunder School. The real thunder rattled him. Ramarayar was afraid of the thunder but to him, showing the fear was a shame. He wrung the end of the wet sarong – Vēshti-, dried his damp beard, and recited, "Om Sakti, Om Sakti, Om Sakti."
8) வேணு முதலியார் பாடத் தொடங்கினார்.
திக்குக்கள் எட்டும் சிதறி-தக
தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம்
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது, பாயுது, பாயுது, தாம் தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம்
சாயுது, சாயுது, சாயுது, பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட
வெட்டி யடிக்குது, மின்னல்-கடல்
வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூ வென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச் சட, சட்டச் சட, டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!-
தக்கத் தக, தக்கத் தக, தித்தோம்!
இவ்வாறு பாடிக் கொண்டு வேணு முதலியார் குதிக்கத் தொடங்கினார். காற்று ஹ¤ஹ¤ஹ¤ என்று கத்துகிறது. வேணு முதலியாரும் கூடவே கத்துகிறார். இடி நகைக்கிறது. வேணு முதலியார் அதனுடன் கூட நகைக்கிறார்.
இவர் குதிக்கிற மாதிரியைக் கண்டு பக்கத்தில் இருந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் தெளிந்தது.
8. Venu Mudaliar sang.
Cardinal directions eight shattered
Theem tharikida theem tharikida theem tharikida theem
Nearby mountains shatter – floods
Rage, rage, rage. Thām tharikida
Thakkath thathingida thithōm andam (word_
Leaning, leaning, leaning, seized by the ogress
Flotsam flying in the wind – Thakkath
Thām tharikida , thām tharikida, , thām tharikida, , thām tharikida
Chopping and thrashing, lightning- sea
Heroic screen endowed with firmament thrashed
Heaping and thundering clouds -Koo
Koo (onomatopoeic sound) bores into the sky the wind
Sattach sada, Sattach sada, Dattā- that is the sound
The drums sounding, neighing, and whinnying sky
Eight directions thunder and rain
Why did you come, brother brave
Thakkath thaka, thakkath thaka, thiththōm
Venu Mudaliar sand danced. The wind shouts, ha, ha, ha. Venu Mudaliar shouts along with the wind. The thunder laughs. Venu Mudaliar laughs with it. Seeing the jumping of Mudaliar, the rest appear at ease with the waning of the fear.
9) ராமராயர் "ஓம் சக்தி" மந்திரத்தாலே பயத்தை நிவர்த்தி செய்துகொண்டு "மகா பிரகிருதி வீரரசம் காட்டுகிறாள்" என்று சொன்னார். "ரௌத்ர ரசம் என்று பிரமராய அய்யர் திருத்திக் கொடுத்தார். "இரண்டும் ஒன்றுதான்" என்று ராமராயர் மனதறிந்து பொய் சொன்னார். எதிரியை வார்த்தை சொல்ல விடக் கூடாதென்பது ராமராயருடைய கொள்கை. இப்படி யிருக்கையிலே மழை கொஞ்சம் கொஞ்சம் குறையலாயிற்று; நெடுநேரம் அங்கே நின்றோம். ராமராயருக்குச் சாயங்காலமே கொஞ்சம் ஜலதோஷம்; மழையில் உடம்பு விறைக்கத் தொடங்கிற்று. இதை வேணு முதலியார் கண்டு அவரை இரண்டு கையாலும் மூட்டைபோலே தூக்கி நிமிர்ந்து நின்று தலைக்கு மேலே கையெட்டும் வரை கொண்டு போய்த் தொப்பென்று தரையின் மேலே போட்டார். "அட மூடா!" என்று சொல்லி ராமராயர் எழுந்து நின்று கொண்டு, "உடம்பெல்லாம் சுடக்கெடுத்ததுபோல் நேராய் விட்டது. உடம்பில் உஷ்ணம் ஏறிவிட்டது. இப்போது குளிர் தெரியவில்லை" என்று சொன்னார். 9. Ramarayar, by reciting 'Om Sakthi' Mantra, eliminated fear in him and said, "Mahā Prakriti demonstrated Vīrarasam (Streak of bravery). Brahmaraya Iyar corrected him, saying, 'Raudra Rasam.' Ramarayar, knowing of his falsity, said, "The two are the same," demonstrating his mindset that the opponent's argument should not go countermanded. The rain was less fierce by this time. Ramarayar, that evening itself, had a bout of the cold and a minor stiffness of the body. Seeing this, Venu Mudaliar lifted him with both hands as if he had a sack, lifted him above the head, and dropped him to the floor. Ramarayar, calling Mudaliar an idiot, said that his body warmed up and no more cold stiffened him.
10) சிறிது நேரத்துக்குப் பின் மழை நின்றது. நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியே வேணு முதலியார் பாடுகிறார். 10. The rain stopped. We returned home. On the way, Venu Mudaliar sings his poem.
11) அண்டங் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக்குதித் திடுகின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண் முன்பு கண்டோம்
கண்டோம், கண்டோம், கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்?
தக்கத்தகத் தக்கத்தக தித்தோம்.
மறுநாள் காலையில் ராமராயர் பிரமராய அய்யருக்குப் பந்தய ரூபாய் பத்தும் செலுத்திவிட்டார்.

 


 11. The world is shaking, brother-
A thousand-head Sesha, like a demon
Exultingly jumps – Directions
Jump by the hillside. The heaven's celestials
Worship with floral bouquets. What a
Divinely sight we saw before us.
Saw. saw, saw- This
Time's drama before our eyes saw
Thakkath thakkaththaka thiththōm.
The following day, Ramarayar paid the bet in the amount of Rs. 10.00






 

12. பிங்கள வருஷம் 12. Pingala Year
1) வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்த சாமி கோவில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த மடத்தில் பல வருஷங்களுக்கு முன்பு சித்தாந்தசாமி என்ற பரதேசி ஒருவர் இருந்தார். அவருடைய ஸமாதியிலே தான் அந்தக் கோயில் கட்டியிருக்கிறது. கோயில் மூலஸ்தானத்துக் கெதிரேயுள்ள மண்டபத்தில், நாளது சித்திரை மாதம் பதினோராந்தேதி திங்கட்கிழமை காலை ஒன்பது மணி நேரத்துக்கு முன்னாகவே நானும் என்னுடன் நாராயணஸாமி என்றொரு பிராமணப் பிள்ளையும் வந்து உட்கார்ந்தோம். பகல் முழுதும் ஊருக்கு வெளியே தனியிடத்தில் போயிருந்து உல்லாசமாகப் பொழுது கழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்தோம். எப்போதும் வழக்கம் எப்படியென்றால், மடுவில் ஸ்நாநம் செய்துவிட்டு மாந்தோப்புக்களில் பொழுது போக்குவோம். புயற்காற்றடித்த பிறகு மாத் தோப்புகளில் உட்கார நிழல் கிடையாது. ஆதலால் மேற்படி கோயில் மண்படத்துக்கு வந்து சேர்ந்தோம். கோயிலைச் சூழ நான்கு புறந்திலும் கண்ணுக்கெட்டினவரை தென்னை மரங்கள் விழுந்து கிடந்தன. பல வளைந்து நின்றன. சில மரங்கள் தலை தூக்கி நேரே நின்றன. புயற்காற்று சென்ற வருஷம் கார்த்திகை மாதத்தில் அடித்தது. ஐந்தாறு மாதங்களாயும், இன்னும் ஒடிந்து கிடக்கும் மரங்களையெடுத்து யாதேனும் பயன்படுத்த வழி தெரியாமல் ஜனங்கள் அவற்றை அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். 1. North of Vedapuram at two stone distances from Siddhanta Swamy Koil existed. Paradesi Siddhanta Swamy lived in a mutt at the temple many years ago. On his burial place, the temple rose. A Brahmana boy Narayanaswamy and I sat inside the Mandapam in front of the main sanctum at 9 AM on a Monday in the Chitrai month (April 14 to May 14). We left the house with the intention of spending time leisurely all day in a peaceful place on the outskirts of the town. Our habit is to take a dip in the pond and spend time in the mango groves. After a cyclone, there was no shade for sitting. Therefore, we reached the Mandapam. The uprooted coconut trees were on the ground around the temple as far as the eyes could see in all directions. Some stood bent at various angles. Some were ramrod- straight with heads aloft. The cyclone hit the area in Karthikai (Mid-November to Mid-December) last year. People left the fallen trees, not knowing how to make use of them.
2) இதைப் பார்த்துவிட்டு என்னோடிருந்த நாராயணஸாமி சொல்லுகிறான் :''கேட்டீரா, காளிதாஸரே, இந்த ஹிந்து ஜனங்களைப் போல சோம்பேறிகள் மூன்று லோகத்திலுமில்லை. இந்த மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டுபோய் எப்படியேனும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் விழுந்தது; கிடந்தால் கிடந்தது; ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாமர தேசமையா! பாமர தேசம்!'' என்றான். நான் அங்கே தனிமையையும் மவுனத்தையும் வேண்டி வந்தவன் ஆனபடியினால் அவனை நோக்கி- ''நாராயணா; ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும். தனியிடம்; இங்கு மனுஷ்ய வாசனை கிடையாது; தொந்தரவும் இல்லை மடத்துப் பரதேசிகள்கூடப் பிச்சைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்கள். சிவசிவா என்று படுத்துத் தூங்கு'' என்றேன். அவனும் அப்படியே சரியென்று சொல்லி மேல் உத்ரீயத்தை (உத்தரீயம் = upper garment) விரித்துப் படுத்தான் உடனே தூங்கிப் போய்விட்டான். என் கையில் ''குரு பரம்பரா ப்ரபாவம்'' என்ற வைஷ்ணவ நூலொன்று கொண்டு வந்திருந்தேன். சட்டைத் துணிகளையெல்லாம் கழற்றித் தலைக்குயரமாக வைத்துக்கொண்டு நானும் படுக்கை போட்டேன். அந்த புஸ்தகத்தில் ''ப்ரவேசம்'' என்ற முகவுரையில் பாதி வாசிக்கும் போதே எனக்கும் நல்ல தூக்கம் வந்தது. ஜில்ஜில்லென்று காற்று சுற்றிச் சுற்றியடித்தது. கண் சொக்கிச் சொக்கித் தூங்கிற்று விழித்து விழித்துத் தூங்கி பின்பு கடைசியாக எழுந்தபோது பகல் பதினோரு மணியாய்விட்டது. எழுந்தவுடனே கோயிற் கிணற்றில் ஜல மிறைத்து ஸ்நானம் பண்ணினோம். அந்தக் கிணற்று ஜலம் மிகவும் ருசியுள்ளது. நன்றாகத் தெளிந்தது. ஸ்நானத்தினுடைய இன்பம் வர்ணிக்க முடியாது. பிறகு வேதபுரத்திலிருந்து ஒருவன் ஆஹாரம் கொண்டு வந்தான். சாப்பிட்டுத் தாம்பூலம் போட்டு கொண்டிருந்தோம். அப்போது கோயிலுக்கெதிரேயுள்ள அல்லிக் குளத்தில் நாலைந்துபேர் வந்து குளித்துக்கொண்டிருந்தார்கள் ''நேர்த்தியான கிணற்று ஜல மிருக்கும்போது, அதை இறைத்துதீரா?'' என்று நாராயணஸாமி முணுமுணுத்தான். அந்த நால்வருடைய பெயரெல்லாம் நான் விசாரிக்கவில்லை. அவர்கள் அப்போது பிங்கள வருஷத்துப் பலாபலன்களைப் பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய ஸம்பாஷணையை இங்கு எழுத வேண்டுமாதலால், அவர்களுக்கு, நெட்டையன், கட்டையன், சாரியன், கரியன் என்ற கற்பனைப் பெயர்கள் கொடுக்கிறேன். 2. Seeing the broken trees, Narayanaswamy said, "Hear this Kalidasa! There are none lazier than the Hindu people in all three worlds. Could not they chop these trees and use them in any way they can? The fallen remains fallen; the lying on the ground remains to lie. No one to ask why in India? Ignorance dominates the country."
I came to the Mandapam seeking solitude and silence. I said to him, "Narayana! Let the Hindus go their way. We are in a solitary place, with no sight, sound, or smell of people. The Mandapam is quiet. I said, "The Mutt Paradesis have gone out begging for food. And they will return only at noon. Say Siva-Siva and go to sleep." He spread the upper garment on the floor and went to sleep. I had on my hand a Vaishnava book, 'Guru Paramparā Prabhāvam.' As I was reading halfway through the introduction, I felt sleepy. A cold wind blew all around. My eyes were droopy, alternating with wakefulness, I slept, and by the time I woke up, it was 11 AM. We went for a quick bath with crystal clear well water, which was potable and of good taste. I could not even describe the joy I had with the bathing. A person brought us food from Vedapuram. We ate and chewed on Pan and areca nut. We saw a few people taking a bath in the flower pond in front of the temple. Narayanaswamy murmured, "When there is crystal clear well water, why do they bathe in the pond. I did not enquire about the names of the foursome. The bathers discussed the benefits of Pingala year, the 51st year of the Jupiter cycle. Since I had to describe their discussion, I will give them fake names: Nettaiyan, Kattaiyan, Soriyan, and Kariyan.
The Tamil calendar follows a 60-year cycle which is also very ancient. It is among the most traditional calendars of India and China. This calendar is related to the five revolutions of Jupiter around the Sun and the 60-year orbit of Nakshatras (stars), as mentioned in Surya Siddhanta.[
3) சொரியன் சொல்லுகிறான்-புது வருஷத்துப் பஞ்சாங்கம் வாங்கிட்டீர்களா? இந்த வருஷமெப்படி? ஜனங்களுக்கு நல்லதா? இருக்ககூடாதா?
கரியன்: நள வருஷத்திலே நாய் படும் கஷ்டம். பிங்கள வருஷத்தில் பின்னுங் கொஞ்சம் கஷ்டம் ஜனங்களுக்கு சுகமேது?
கட்டையன்: நேற்று பூமியிலே ஒரு நக்ஷ¢த்திரம் வந்து , பூமி தூள்தூளாகச் சிதறிப் போகுமென்று ஒரு மாஸகாலமாக எங்கே பார்த்தாலும் ஒரே பேச்சாய்க் கிடந்தது ஒன்றும் நடக்கவில்லை பொய்யென்கிறேன்.
நெட்டையன்: அட போடா! தூள்தூளாகப் போகுமென்று நம்ம தமிழ்ச் சோசியன் சொல்லவில்லை. சீமைப் புளுகு!
கட்டையன்: தமிழ்ச் சோசியனுக்கு இப்படிப் பெரிய பொய் சொல்லத் தெரியாது அவன் புளுகுகிற விதம் வேறே!
நெட்டையன்: அட போடா! தமிழினிலே ஒருத்தன் இரண்டுபேர் நிஜம் சொல்லுகிற சோசியனும் முண்டு. ஆனால் நிஜம் பேசுகிற சோசியனுக்கு ஊரிலே அதிக மதிப்புக் கிடையாது.
கட்டையன்: சோசிய சாஸ்திரமே பொய்யென்கிறேன். அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில்
3. Soriyan:" Did you buy the new year calendar? The forecast: is it in favor of people or not?
Kariyan: The 50th year, Nala year. The dogs suffered, and this year (Pingla), the people will face some difficulties.
Kattaiyan: "A month-long gossip was a star should have stricken the earth yesterday and pulverize it. Nothing happened. It was all a fabrication."
Nettaiyan: "Get out of here. Our Tamil astrologer did not tell that. That lie was of foreign origin."
Kattaiyan: "Tamil astrologer cannot tell such a big lie. His lying is different."
Nettaiyan: "Among Tamil astrologers, there are one or two truth sayers. But the truth-saying astrologer does not get respect."
Kattiayan: "I say the whole astrology is a big lie."
They were talking on the subject in this manner
4) நாராயணஸாமி ஒருபுறம் கிளம்பிவிட்டான். அவன் சொல்லுகிறான்.'ஏன் காளிதாஸரே, அமெரிக்காவில் பெரிய பெரிய ஸயன்ஸ்கார சாஸ்திரிகள் கண்டுபிடித்துச் சொன்னதுகூடப் பொய்யாகிவிட்டதே! இது பெரிய ஆச்சர்யம்! பூமி தூளாகா விட்டாலும் ஒரு பூகம்பமாவது நடக்குமென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நேற்று ராத்திரி நம்ம தெருவில் அநேகர் தூங்கவேயில்லை. குழந்தை குட்டிகளை எல்லாம் விழிக்க வைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஸயன்ஸ் பண்டிதர்கூடச் சில சமயங்களில் பொய் சொல்லத்தான் செய்கிறார்கள்'' என்றான். 4. Narayanaswamy said, as he was leaving, "Hey Kalidasa! The sayings of famous American scientists turned out to be lies. I was expecting at least an earthquake, if not pulverizing the end of the earth. Last night, our street residents did not go to sleep. They worried and kept their infants and children awake, expecting the catastrophe, which never came. Scientists once in a while tell lies."
5) நான் குளத்தில் குளித்தவர்களுடைய சம்பாஷணையில் கவனம் செலுத்தினேன். 5. I was paying attention to the conversation held by the bathers in the lake.
6) நெட்டையன் சொல்லுகிறான். வேதபுரத்திலே வெங்காயக் கடைக்குப் பக்கத்து வீட்டிலே பெரியண்ணா வாத்தியார் இருக்கிறாரே, தெரியுமா அவர் சோசியம் தப்பவே செய்யாது. அவர் எங்கள் தாத்தா செத்துப் போன நாள், மணி எல்லாம் துல்யமாகச் சொன்னார். பூமி வெடிக்காதென்றும். அது சீமைப்புளுகென்றும், அதை நம்பக்கூடாதென்றும் அவர் என்னிடம் பத்து நாளுக்கு முந்தியே சொன்னார். பெரியண்ணா வாத்தியார் நாளது பிங்கள வருஷத்துக்குச் சொல்லிய பலன்களையெல்லாம் அப்படியே சொல்லுகிறேன். கவனமாகக் கேளுங்கள் 6. Nettaiyan said, "Do you know the Periyanna Vaththiyar living next to the onion shop in Vedapuram? His astrology is always on the mark. It never failed once. He accurately predicted the day and the hour my grandfather died. Ten days before the predicted non-event, he told me that we should not believe in foreign lies. Let me narrate Periyanna Vaththiyar's predictions about the forthcoming Pingala year. Listen attentively".
7) பிங்கள வருஷத்தில் நல்ல மழை பெய்யும். நாடு செழிக்கும் நாட்டுத் தானியம் வெளியே போகாது. ஏழைகளுக்குச் சோறு கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். பசு முதலிய நல்ல ஐந்துக்கள் விருத்தியாகும். துஷ்ட ஜந்துக்கள் எல்லாம் செத்துப்போகும். தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி- a large scorpion - முதலியவற்றின் பீடை - Affliction, sorrow, distress, misery;- குறையும். வெளித் தேசங்களில் சண்டை நடக்கும்; நம்முடைய தேசத்தில் சண்டை நடக்காமலே பல மாறுதல் ஏற்படும். ஜாதி பேதம் குறையும். ஆணுக்கும் பெண்ணுக்கும் படிப்பு விருத்தியாகும். ஜனங்களுக்குள்ளே தைரியமும், பலமும், வீரியமும், தெய்வபக்தியும் அதிகப்படும், நம்முடைய தேசம் மேன்மையடையும் என்று பெரியண்ணா வாத்தியார் சொன்னதாக நெட்டையன் சொன்னான் 7. Rains will be abundant in Pingala year. The country's farm produce will be plenty. The grains export abroad will not happen. The poor will get more to eat. The cattle population will increase. The wild and dangerous animals, the poisonous ones, and afflictions will diminish in numbers. War will be the lot in foreign countries. Plenty of changes without war will take place in our country. Caste differences will diminish. Education among boys and girls will increase. Nettaiyan said that according to Periyanna Vaththiyar that our country will become great.
8) ''நாராயணஸாமி, கவனி'' என்றேன்.
''பாமர ஜனங்களுடைய வார்த்தை'' என்று நாராயணஸாமி சொன்னான்.
''தெய்வ வாக்கு'' என்று நான் சொன்னேன்.
பிறகு சிறிது நேரம் அந்தக் கோயிலில் சுகமாகப் பாட்டிலும் பேச்சிலும் பொழுது கழித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டோம்.
8. I said, "Narayanaswamy, pay attention."
Narayanaswamy: "Ignorant people's rants."
I said, "Divine sayings."
We spent some time in conversation and poetry recitation and returned home.

 

13. காக்காய் பார்லிமென்ட் 13. Crow Parliament
1) நேற்று சாயங்காலம் என்னைப் பா‘க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். "உம்முடைய பெயரென்ன?" என்று கேட்டேன். "நாராயண பரம ஹம்ஸர்" என்று சொன்னார். "நீர் எங்கே வந்தீர்?" என்று கேட்டேன். "உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்" என்று சொன்னார். "சரி, கற்றுக் கொடும்" என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார்.
காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.
1)Yesterday, a Swamy came from Udupi to see me. I asked him, "What is your name?" He said, ''Narayana Paramahamsar.''
"Why did you come to see me?"
"I came to teach you the languages of animals. Udupi Uzhakku Pillaiyar sent me to you.''
"OK. Teach me."
He taught me. Crow's language is easy to learn in two hours.
2) "கா" என்றால் 'சோறு வேண்டும்' என்றர்த்தம். 'கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே' என்றர்த்தம். 'காக்கா' என்றால் 'எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே' என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. 'காஹகா என்றால் சண்டை போடுவோம்' என்றர்த்தம். 'ஹாகா' என்றால் 'உதைப்பேன்' என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ, முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினாதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தைகூட மற்றவர்களுக்குச் சொல்லக்கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். "போனால் போகட்டும். ஐயோ, பாவம்" என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன். 2. Kā means "Cooked rice, I need." Kākkā means, "Do not partake of my share of the cooked rice." When the male crow addresses the female crow and says, 'Kākkā,' it means, "My love, give me a kiss." 'Kāhakā' is an invitation to fight. Hākā means, 'I will kick you.' Seven or eight syllables – Ka, Hā, khā- in various combinations make the crow language and vocabulary. No time is available to list all the words of the crow language. Narayana Paramahamsar does not know Tamil and therefore does not read the newspapers. He forbade me to teach others the crow language, not even a few words as examples. Taking mercy, I revealed to you a few words.
3) இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீட்சை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. "நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?" என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும். அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. "போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. 3. That evening, I sat on the open terrace of the upper floor to check out the words of the crow language. I had a clear view of the wall of the upper deck of the next door. About 40 crows were sitting on the wall. Grammatically, I had to mention the exact number of crows. I cannot discuss the Bohar grammar now. I will touch on it on another day and another time. Now the talk is only on Crow parliament.
4) அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: "மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கட்சி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிடவேண்டுமென்பது இரண்டாவது கட்சி. இரண்டு கட்சியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டும் என்று மூன்றாவது கட்சி மேற்படி மூன்று கட்சியாரும் திருடரென்று நாலாவது கட்சி இந்த நாலு கட்சியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசு கிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கட்சி. இப்படியே நூற்றிருபது கட்சிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம். 4. Of the forty crows, there was an old king crow. The king earns the highest pay among men and owns more property than all the poor people. Last month, I was in the town and saw a crane from Russia. A war was devastating that country. The country had two hundred-twenty parties. The Czar king was a good man of the first party, but a second party wanted to overthrow the Czar. Claiming both parties are dishonest, the third party wanted to get rid of both. The fourth party claimed all three parties were thieves. The fifth party wanted to sack all four parties and establish Jesus Christ worship.
5) "இந்த 120 கட்சியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல், இந்தியாவுக்குப் போவோம், அங்கேதான் சண்டையில்லாத இடம். இமயமலைப் பொந்தில் வசிப்போம்' என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸன்ட் அம்மாளுடைய தியசாபிகல் சங்கத்துத் தோட்டத்தின் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்து தோஷம் நீங்கி விடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம். 5) Unable to put up with the harm caused by the internecine feuds of these 120 parties of the country, the crane went to India, free of conflicts and to live in a hole in the Himalayan Mountain range. The crane heard from other cranes that living in Anni Besant Gardens will help erase the sin of witnessing the mutual killings in Russia. The crane went south to live in Anni Besant gardens for some time.
6) "கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்திவிட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலே கூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக்கூட எல்லா ஜனங்களும் சேர்ந்த பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள். 6. "Did you hear this, crows! The opponents beat up the Czar and threw him out. Like the Czar, the Travancore Maharaja, and Mysore Maharaja have property worth millions upon millions of Rupees
7) "நானோ உன்னை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்: 7) The king Crow: "I rule you crows 'for no particular reason, though you come to me for dispute resolution among you. I talk a lot that my throat goes dry and bring comity. You come to me for advice to face dangers. I work hard to discover new ways to face danger. Any remuneration for all this? None at all. I knuckle down for nothing. Like all others, I work myself to the bone to fill my belly through blood, toil, tears, and sweat. Hey crows, listen to me."
8) "ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும்: அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இப்போது என் குடும்பத்துக் காக்கைகளுக்கும் மற்றக் காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொல்லையிலே கிடந்தது! அது சோறில்லை; கறியில்லை; எலும்பில்லை; ஒன்றுமில்லை; அசுத்த வஸ் கிடந்தது. அதைத் தின்னப் போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான். என் மேலே, இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரஜைகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும்" என்று சொல்லிற்று. 8. The king crow continues. "Every crow should give one in six parts of food to me. With that, I will feed my wife, children, siblings, uncles and aunts, concubines, and their families. We have to make sure that they do not go half hungry. I see no difference between my family and other crows.
I was in the backyard of the house and saw horrible stuff. It was not food, meat, or bone. As I walked over to eat it, an older man threw a stone at me and injured my right wing, which should not be the case. You, subjects, should give one in six parts of your food."
9) இதைக் கேட்டவுடன் ஒரு கிழக்காகம் சொல்லுகிறது:
"மகாராஜா? தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள்! அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரிமாருக்கும் அவசர முண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்க வேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது" என்று சொல்லிற்று. அப்பொழுது ஒரு அண்டங்காக்கை jet black crow எழுந்து: "கக்கஹா கக்கஹா, நீங்கள் இரண்டு கட்சியாரும் அயோக்கியர்கள். உங்களை உதைப்பேன்" என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக்காட்டி: "அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்" என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.
.
9. When the old crow heard it, it said, "Maharaja! It is not fair you establish a new tradition. In expectation of an emergency, you speak. It is not just for us to speak against your words. It surprises me that you did not recognize that the ministers like us also have emergencies. It occurs to me that each crow should contribute one in twelfth part of the food and that you should give a third of that to the cabinet of ministers. A jet-black crow rose and said, "Kakkahā, "Kakkahā. Both parties are dishonest. I will kick you." Another crow tried to bring peace. Another crow pointed to the narrator of the story and said, "That man understands every word we speak. Therefore, we should not talk here. Let us go somewhere else." Immediately, all the crows lifted off from their perch and flew away.
இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை Bharathi: This is not a true story. Fictional story.

 

14. பிழைத்தோம் 14. Liberation
மாலை நாலு மணியாயிருக்கும்.
1) நான் சிறிது ஆயாசத்தினால் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாம்பூலம் போட்டுக் கொள்ள யோசனை செய்து கொண்டிருந்தேன். அப்போது வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் வந்து சேர்ந்தார். இவர் நமக்கு ஆப்த சிநேகிதர். நல்ல யோக்கியர். ஆனால், சூதுவாது தெரியாத சாதுவான பிராணி.
இவர் வந்தவுடனே "ஓராச்சரியம்?" என்று கூவினார். "என்ன விஷயம்?" என்று கேட்டேன். "நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன்" என்றார். "என்ன கனவு? சொல்லும்" என்றேன்.
 1. It was 4 PM. Because of little weariness, I had a light sleep, woke up rubbing my eyes, and thought of chewing on the pan. That moment, Virapuram Krishnaiyangar came to my house. He was a close friend, honest, bereft of deviousness, and peace-loving. He shouted out on entrance, "A wonder. " 'I asked him, "What was the matter?" He said, "I had a dream last night." I said, "What dream?"
2) வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் பின்வருமாறு சொல்லலானார்.
"டாம், டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பட்சி போலே அகப்பட்டுக் கொண்டேன். திடீரென்று எனக்குக் கீழே ஒரு வெடி கிளம்பும். அது என்னைக் கொண்டு நூறு காதவழி தூரத்தில் ஒரு க்ஷணத்திலே எறிந்துவிடும். அப்படிப்பட்ட வேகத்தை சாமானியமாக விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்மாலே ஸ்மரிக்கக்கூட முடியாது
2. The visiting friend said, "I heard explosive sounds, Dām, Dām, Dām. There was smoke all around. I was in the grasp and the power of the cyclone of smoke like a bird. Suddenly below me, an explosion threw me off a long distance (100 Kādhavazhi = 1,000 miles) away. We cannot imagine the speed in the awake period."
 (காதவழி = Kādhavazhi = An Indian league = 10 miles
3) "மனோவேகம் என்பதின் பொருளை நேற்று ராத்திரி தான் கண்டேன். அடே ராமா! ஒரு தள்ளுத் தள்ளினால் நேரே தலையை வானத்திலே கொண்டு முட்டும். அங்கே போனவுடன் மற்றொரு வெடி. அது பாதாளத்திலே வீழ்த்தும். எட்டுத் திசையும் பதினாறு கோணமும், என்னைக் கொண்டு மோதினபடியாக இருந்தது. வெடியின் சத்தமோ சாமானியமன்று. அண்ட கோளங்கள் இடிந்து போகும் படியான சத்தம். இப்படி நெடுநேரம் கழிந்தது. எத்தனை மணிநேரம் இந்தக் கனவு நீடித்ததென்பதை என்னால் இப்போது துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் சொப்பனத்திலே அது காலேயரைக்கால் யுகம் போலிருந்தது. மரணாவஸ்தை இனிமேல் எனக்கு வேறு வேண்டியதில்லை. மூச்சுத் திணறுகிறது, உயிர் தத்தளிக்கிறது. அந்த அவஸ்தை ஒரு முடிவுக்கு வருமென்றாவது, என் பிராணன் மிஞ்சுமென்றாவது எனக்கு அப்போது தோன்றவேயில்லை. 3. "I discovered last night the meaning of the word (Mind-speed) the speed of the mind. Ade Rama! One push will take the head butt against the sky, and another explosion will take you down to the netherworld. It was like eight directions and sixteen angles, causing me to crash. The sound was no ordinary sound. The sound was like the crashing of the worlds. It lasted for a long time. I cannot accurately calculate how long the dream lasted. The dream appeared to have lasted three-eighths of a Yuga. I do not need any more of the deathly pangs. The breathing was difficult; life was ebbing; never a moment I thought it will end; I did not think I would come out of this alive.
4) "நெடுநேரம் இப்படி என்னைப் புரட்டித் தள்ளிய பிறகு ஒரு சுவர்மேலே கொண்டு மோதிற்று. அந்தச் சுவரில் 'ஓம் சக்தி' என்று ஒளி எழுத்துக்களால் பலவிடங்களில் எழுதப்பட்டிருந்தது. அவற்றுள் மிகவும் ஒளி பொருந்திய எழுத்தின் கீழே ஒரு சிறு பொந்திருந்தது. அந்தப் பொந்துக்குள்ளே போய் விழுந்தேன். ஆரம்பத்தில் இவ்வளவு சிறிய பொந்துக்குள் நாம் எப்படி நுழைய முடியுமென்று நினைத்தேன். பிறகு சொப்பனந்தானே? எவ்விதமாகவோ அந்தப் பொந்துக்குள் என் உடம்பு முழுதும் நுழைந்திருக்கக் கண்டேன். அதற்குள்ளே போனவுடன் புகைச்சலுமில்லை, வெடியும் நின்று விட்டது. மூச்சுத் திணறவுமில்லை, ஆறுதலுண்டாயிற்று. 'பிழைத்தோமப்பா' என்று நினைத்துக் கொண்டேன். இவ்வளவுதான் கனவு. இந்தக் கனவின் பொருளென்ன? இது என்ன விஷயத்தைக் குறிப்பிடுகின்றது?" என்று கிருஷ்ணய்யங்கார் கேட்டார்.
"கனவுக்குப் பொருள் கண்டுபிடித்துச் சொல்லும் சாஸ்திரம் எனக்குத் தெரியாது" என்று சொன்னேன்.


 
4. Krishnaiyengar continued, 'After a long time of bouncing and pushing, the force dashed me to the top of a wall. The wall had 'OM Sakthi' written in many places. One such writing was splendorous, below which was cave into which I fell. Initially, I wondered how I could enter such a narrow cave. I saw my whole body snugly fit into the space. Once in the space, no sound or smoke was obvious. My breathing was at ease; I felt a sense of comfort and relief from the ordeal. There ended my dream, the meaning of which I am seeking."
I told him, "I am not familiar with the art of interpreting dreams."

5) கிருஷ்ணய்யங்காருக்குத் திருப்தி ஏற்படவில்லை. நான் கனவு சாஸ்திரத்திலேயே ஒரு வேளை நம்பிக்கையில்லாமல் இருக்கலாமென்று நினைத்து அவர் கொஞ்சம் முகத்தைச் சிணுக்கினார். பிறகு சொல்லுகிறார்:
"அப்படி நினையாதேயுமையா, கனவுக்குப் பொருளுண்டு. பலமுறை கனவிலே கண்டது நனவிலே நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.
'காலைச் சுற்றின பாம்பு கடித்தாலொழிய தீராது' என்று வசனம் சொல்லுகிறது. ஆதலால், நான் இவருக்கு ஏதேனும் விடை சொல்லித்தான் தீர வேண்டுமென்று கண்டுபிடித்துக் கொண்டேன். எனவே பின்வருமாறு சொன்னேன்:
"அந்த வெடிப்புத்தான் உலகநிலை; அந்த சக்தி மந்திரமே தாரகம். அந்தப் பொந்து விடுதலை. அதற்குள் நுழைவது கஷ்டம். தெய்வ வெடியினாலே தள்ளினாலொழிய மனிதன் ஜீவன் முக்தி நிலையில் நுழைய முடியாது. உள்ளே நுழைந்து விட்டால் பிறகு அது விஸ்தாரமான அரண்மனையாகக் காணப்படும். அதற்குள்ளே நுழைந்தவர்களுக்கு அதன் பிறகு எவ்விதமான அபாயமுமில்லை. அதற்குள்ளே போனவர்கள் உண்மையாகவே பிழைத்தார்கள்" என்று சொன்னேன். கிருஷ்ணய்யங்கார் இதைக் கேட்டு மிகவும் சந்தோஷத்துடன் விடை பெற்றுச் சென்றார்.
5. Krishnaiyengar did not appear satisfied with the answer and showed disapprobation of my distrust in dream interpretation.
Krishnaiyengar said, "Don't discount the dreams. They carry meaning. I have seen dreams come true in real life."
The saying goes, 'It is not over until the snake wound around the leg bites.'
I discovered I needed to give him an answer.
I said the following, "That explosion is the state of the world. The Sakthi Mantra is the refuge. The cave is liberation, entrance into which is difficult. If it is not for the explosive divine push, man cannot enter into the realm of Jivan Mukthi (liberation of the individual soul). Once entry occurs, the cave will appear as an expansive palace. All those transiting to Mukthi do not face any danger. The entrants were truly emancipated." Krishnaiyengar, hearing this explanation, was joyous and took leave of me

 

 

 

15. புதிய கோணங்கி  15. A new Konangi 
 
  Kōnangi (கோணங்கி) means a person with angles, commonly translated as a buffoon.   கோணம்  = Kōnam = angle. அங்கி = ஆடை, மேலாடை = Angi = clothing = Buffoon
1) வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடு குடுப்பைக்காரன் புறப்பட்டிருக்கிறான். உடுக்கைத் தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களும் காட்டுகிறான். தாள விஷயத்திலே மஹா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணி மூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு. மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை தடியன். காலிலே ஹைதராபாது ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக் காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வது போலே செய்கிறான், நல்ல கெட்டிக்காரன்  1. In Vedapuram, a Damaru ( = Udukai = hand-held drum) player distinguished himself. He played and excelled in playing 35 different syllables. He never carried a sack on his shoulders. He wore a good white Veshti and a white shirt. His big headgear consisted of a long red cloth encircling his head and appeared as big as half the size of the Nellore rice bag. A large kumkum dot was on his forehead, complementing his ruddy complexion, a broad face, a mustache with sideburns, tall stature, sturdy body, and Hyderabad footwear. Yesterday in the morning, he passed along on my street. He played extensive notes on his Damaru with a great flash, panache, finesse, and flamboyance, as witnessed on a Mrudungam player. He was an intelligent person.
2) அவன் சொன்னான்-
''குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது
ஜாதிகள் சேருது, சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளீ,
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!
தரித்திரம் போகுது, செல்வம் வருகுது;
படிப்பு வளருது பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினான்
போவான்,போவான் ஐயோவென்று போவான்.
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சரித்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திர மெல்லாம் வளருது. வளருது!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ
அந்தரி, வீரி, சண்டிகை சூலி
2. He said,
''kudukudu, ''kudukudu, ''kudukudu, ''kudukudu
Good times are coming; good times are coming
The castes integrate, rancor vanishes
Tell me, tell me Sakthi Mākālī,
For the Vedapuri towners, tell some auspicious inkling
Poverty moving out, prosperity moving in;
Education grows, sins vanish.
The learned perpetrated deception and sin
They will be gone for bad or worse
Vedapuram prospers in business
Employment grows the worker will live well
History is being made, knowledge understood
Machines abound Scheme abound
Mantras grow, grow!
Kudu Kudu, Kudu Kudu, Kudu Kudu, Kudu Kudu.
Say it, say it, mountain ruling Bhagavathī
Andhari, Vīrī, Chandikai Sūli
3) இப்படி அவன் சொல்லிக்கொண்டே போவதை நான் மெத்தையிலிருந்து கேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனை நிற்கச் சொன்னேன். நின்றான். கீழே இறங்கிப்போய், அவனை ஸமீபத்திலே அழைத்து ''எந்த ஊர்'' என்று கேட்டேன். ''சாமி, குடுகுடுக்காரனுக்கு ஊரேது, நாடேது? எங்கேயோ பிறந்தேன், எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லலாமோ சுற்றிக் கொண்டு வருகிறேன்'' என்றான்.
3) I heard him from the terrace as he sang his song. Realizing the newness of his song, I asked him to stop. I went downstairs, motioned him to come close to me, and asked him, "Where are you from?" He said, "No town or country for a drum player. Born somewhere, grew up elsewhere, wandering all over."
4) அப்போது நான் சொன்னேன்
''உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் past history கூடிய வரையில் ஸவிஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தியான சரிகை வேஷ்டி கொடுக்கிறேன்'' என்றேன். ஸவிஸ்தாரம் = சவிஸ்தாரம் cavistāram , n. sa-vistāra. 1. That which is wide or elaborate; விரிவுடையது. 2. Anything of importance or consequence
அப்போது குடுகுடுக்காரன் சொல்லுகிறான்: ''சாமி, நான் பிறந்த இடம் தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பனாருக்கு இதுவே தொழில், அவர் தெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். ''ஒன்பது கம்பளத்தார்'' என்ற ஜாதி, எனக்குப் பத்து வயதாக இருக்கும்போது, தஞ்சாவூருக்கு என் தகப்பனார் என்னை அழைத்துக் கொண்டு போனார். அங்கே வைசூரி கண்டு செத்துப் போய்விட்டார். பிறகு நான் இதே தொழிலினால் ஜீவனம் செய்து கொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தார். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு 'கம்பெனி ஏஜெண்டு' இந்தியாவிலிருந்து தாசிகள், நடுவர், கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக்காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக் கூட்டிக் கொண்டு போய், வெள்ளைக்கார தேசங்களிலே, பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன்துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி 'கம்பெனி' கலைந்து போய் விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜனத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனாலும், பூர்வீகத் தொழிலைக் கைவிடுவது நியாயமில்லையென்று நினைத்து இங்கு வந்த பின்னும் பலவூர்களில் சுற்றி, இதே தொழில் செய்து வருகிறேன்.
4) I told him, "Looking at you, you appear new here. You are not crazy-looking. Tell me your history and important events in your life.
The Kudukudukāran said, "Swamy, I don't know where I was born. I never knew my mother's face. My father had the same vocation as mine and belonged to the south. My Jāthi is 'Onpathu Kambalathār.' My father took me to Tanjore at age ten. He died of smallpox. Taking up his profession, I wandered to many nations and ended up in Hyderabad. Then I was 20 years old. A white man by the name of Mr. Johnson was a resident. He was a company agent. The company took from India to foreign countries prostitutes, the Johns, pole dancers, rope dancers, legerdemainists, and magicians to European countries and America on a salary. We lived in tents and practiced our art to the public. My fate was I became an employee of this company and traveled to the USA, France, and England. Two years ago, the war started, and the company closed. The company paid us money and sent us back to India. I have accumulated capital for sustenance. Thinking of not giving up my family craft, I travel all over, practicing my art.
5) ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப் போலே வீண் பொழுது போக்காமல், அவ்விடத்துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன். எனக்கு இங்கிலீஷ் நன்றாகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும், அனேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க்கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவு பட்டிருக்கிறார்கள். 5) When I traveled Europe, I learned the local language, unlike other performers. I speak English very well. I know different languages and read many books. I find the local people deficient in many aspects compared to the Europeans.
6) நம்முடைய பரம்பரைத் தொழிலை வைத்துக் கொண்டே ஊரூராகப் போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடிய வரை நியாயங்கள் சொல்லிக் கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இது தான் என்னுடைய விருத்தாந்தம்' historyஎன்றான்.
ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.
''சாமி, வேண்டியதில்லை'' என்று சொல்லிவிட்டு அவன் மறுபடி உடுக்கை யடித்துக் கொண்டு போய் விட்டான். போகும் போதே சொல்லுகிறான்:

 
6) Practicing the hereditary craft, I travel all over teaching people morality as my life's purpose. That is my history.
I brought from home a gold-laced Sarang (ஜரிகை வேஷ்டி) that I bought for Dipavali. He said, "Swamy, I don't need it." He left me playing on his hand-held drum. He recited his poem
 
.
7) ''குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு,
சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது,
தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது,
எட்டு லச்சுமியும் ஏறி வளருது,
பயந் தொலையுது, பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது,
நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது,
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது,
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது,
சொல்லடீ சக்தி, மலையாள பகவதி,
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது''
என்று சொல்லிக் கொண்டே போனான். அவன் முதுகுப் புறத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.
7) ''Kudukudu, Kudukudu, Kudukudu, Kudukudu
Swamys' boldness is growing,
The paunch is shrinking; diligence growing,
Fear melting sins fleeting,
Sastras growing, caste differences fading
The eye opens, justice apparent,
The old craziness suddenly going away
Heroism dawning, loftiness obtained,
Tell me Sakthi, Mountain-dwelling Bhagavathi
Dharma waxes, Dharma waxes''
He recited this as we went along down the road. Looking at his back and thinking of god, I offered my obeisance and Namaskar.

 

 

   
16. கடல் 16. Ocean
1) ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனியிடத்தில் மணல் மேலே போய்ப் படுத்துக்கொண்டிருந்தேன். பகலில் நெடுந்தூரம் நடந்த களைப்பினால் அப்படியே தூங்கிப் போய் விட்டேன். அந்தத் தூக்கத்திலே கண்ட கனவை எழுதுகிறேன் 1. One day, I was lying down in a secluded place on the beach sand by the oceanside in Vedapuram. Because I walked a long distance in the daytime and of fatigue, I went to sleep. I am narrating the dream I had during sleep.
2) நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன். போகிற வழியில் ஒரு பெரிய பாம்பு கிடந்தது. என்னைக் கண்டவுடன் படத்தைத் தூக்கி என் மேலே பாய்ந்து கடிக்க வந்தது. நான் ஓடினேன். அது என்னைத் துரத்திக் கொண்டு வந்தது. ஓடியோடிக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தேன். பாம்பு காலுக்கு மிகவும் சமீபமாக வந்தது. கடலுக்குள்ளே குதித்தேன். 2. The dream included a big palace with a beautiful garden, a stream, and a sixteen-year-old girl sitting on a grassy stretch on an island in the middle of the ocean. As soon as she saw me, she ran away into the palace. I followed her path and found on the way a snake, which spread its hood and charged towards and tried to bite me. I ran, and the snake followed me to the oceanside, and I jumped into the ocean.
3) கடலிலே புயற்காற்று. ஓரலையைத்தூக்கி மூன்று பனையளவு தூரம் மேலே எறிகிறது. மற்றோரலையை மூன்று பனையளவு பள்ளத்தில் வீழ்த்துகிறது. எப்படியோ சாகாமல் அந்த அலைக்குத் தப்பிவிட்டேன். நெடுநேரத்துக்கப்பால் அலை அடங்கிற்று. நான் நீச்சலை விடவில்லை 3. The ocean was churning from a cyclone and threw me into a pit of the depth of three palmyra-palm trees. But I survived the hurricane. After a long while, the waves stilled, but I did not stop swimming.
4) எப்படியோ நீந்திக்கொண்டு வருகிறேன். ஆனால் கரை தென்படவில்லை. பிறகு கைகளில் நோவுண்டாயிற்று. என்னால் நீந்தமுடியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித்தேன். அங்கே ஒரு கிழவன் தோணி விட்டுக் கொண்டு வந்தான். "அண்ணே, அண்ணே, என்னை உன்னுடைய தோணியில் ஏற்றிக் கொள்ளு. நான் புயற்காற்றில் அடிபட்டு மிகவும் நொந்து போயிருக்கிறேன்" என்று சொன்னேன். அவன் தனது தோணியில் ஏற்றிக்கொண்டான். தோணியை விட்டுக் கொண்டு கடலிலே போகிறோம்; போகிறோம்; வழி தொலையவேயில்லை. "அண்ணே, கரை சேர இன்னும் எத்தனை காலம் செல்லும்? எனக்குப் பசி கண் அடைக்கிறதே. நான் என்ன செய்வேன்?" என்று சொன்னேன். 4. I swam towards the shore, but the oceanside was not visible. My hands were hurting; I could not swim; I recited the name of my family deity. At that time, an old man was plying a boat. I begged him to take me aboard because I was all banged up by the cyclone and was aching all over the body. He took me on the boat and sailed towards the vast ocean. The boat ride did not appear to end. I asked the boatman when the ride would end for us to reach the shore because my eyesight dimmed from hunger.
5) அந்தக் கிழவன் தின்பதற்குக் கொஞ்சம் அரிசி மாவும், ஒரு மிடறு தண்ணீரும் கொடுத்தான். இளைப்பாறி அப்படியே கண்ணயர்ந்தேன். (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்.) கொஞ்சம் ஆயாசம் தெளிந்தவுடனே கண்ணை விழித்துப் பார்த்தேன்; கரை தெரிந்தது. கிழவன் என்னைக் கரையில் யிறக்கி விட்டு, மறுபடி தனது தோணியைக் கடலிலே செலுத்திக்கொண்டு போனான். 5. The old man gave me rice flour and water. I rested and shut my eyes. (The second sleep in a dream.) Recovering from fatigue, I woke up and saw the oceanside. The old man disembarked me on the shore and began plying his boat back on the ocean.
6) நான் அவனிடம் ஏதெல்லாமோ கேள்வி கேட்டேன். அவன் ஒன்றுக்கும் மறுமொழி சொல்லவில்லை. கண்ணுக்கெட்டும் வரை அவன் தோணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடி அந்தத் தீவுக்குள் கொஞ்ச தூரம் போனவுடனே பழைய அரண்மனை தெரிந்தது. அதனருகே சிங்காரத் தோட்டம், அந்த நீரோடை, அந்தப் பெண்ணும் முன்போலவே புல்லாந் தரைமேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். என்னைக் கண்டவுடன் மறுபடி யெழுந்து தன் வீட்டை நோக்கி யோடினாள்.
நான் தொடர்ந்து போகவில்லை.
6. I questioned him on all kinds of matters. He never answered me at all. I saw his boat until I lost sight of it in the ocean. After a short walk, the palace came into view. The original scene came into focus: The palace, the stream, the beautiful garden, the grassy stretch, and the girl sitting on the grass. Seeing me, she ran back into the palace. I did not follow her.
7) தொடர்ந்து போனால் முன்போலவே வழியில் பாம்பு கிடக்குமென்று நினைத்து மிகவும் பயங்கொண்டவனாய், அதிவேகமாகக் கடற்கரையை நோக்கி ஓடிச் சென்றேன். ஓடும் போதே பாம்பு துரத்திக்கொண்டு வருகிறதா என்று பலமுறை திரும்பிப் பார்த்தேன். பாம்பு வரவில்லை. கரைக்கு வந்து சேர்ந்தவுடனே இந்தத் தீவிலிருந்து எப்படியேனும் வெளியேறிப் போகலாமென்று யோசித்தேன். அந்தப் பெண் யாரென்று தெரிந்து கொண்டு பிறகு தான் அந்தத் தீவிலிருந்து புறப்பட வேண்டுமென்று மற்றொரு யோசனை யுண்டாயிற்று. அப்போது பசியும் களைப்பும் அதிகமாக இருந்தபடியால் அவற்றைத் தீர்க்க ஏதேனும் வழியுண்டா என்று சுற்றிப் பார்த்தேன். கரை யோரமாகவே நெடுந்தூரம் நடந்து வந்தபோது அங்கே ஒரு குடிசை தென்பட்டது. 7. I did not pursue her for fear of facing the snake. I ran to the seashore looking back several times to see whether the snake was chasing me. There was no snake behind me, and I thought of somehow escaping from the island. Another thought occurred that I should exit the island only after finding out who the girl was. Fatigue and hunger struck me, and I was looking around for relief. I walked along the seashore for a long distance and found a hut.
8) அந்தக் குடிசைக்குள்ளே போய் நுழைந்தேன். அதற்குள்ளே ஒரு பிள்ளையார் வைத்திருந்தது.
அந்த மூர்த்தியின் முன்னே ஓர் இலையில் சோறு, கறி, பாயசம், பக்ஷணம் முதலியனவும், ஒரு குடத்தில் நீரும், பக்கத்தில் புஷ்பம், சந்தனம் முதலிய பூஜா திரவியங்களும் வைத்திருக்கக் கண்டேன். எனது பசியின் கொடுமையினால் அந்த ஆகாரத்தைத் தின்று விடலாமென்று யோசித்தேன். பிறகு சிந்தனை பண்ணிப் பார்த்தேன். 'போன ஜன்மத்தில் என்ன பாவம் பண்ணியோ இந்த ஜன்மத்தில் இந்தத் தீவில் வரவும், இத்தனைக் கஷ்டப்படவும் ஏதுவுண்டாயிற்று. இப்போது பசித் துன்பத்தைப் பெரிதாக எண்ணி எந்த மகானோ சுவாமி பூஜைக்காக வைத்திருக்கும் திருவமுதை அபகரித்தால், இன்னும் பாவம் மேற்படும். ஆதலால் அந்தக் காரியம் செய்யக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன்.
8. I entered the hut and found Pillaiyar inside. I saw in front of him a leaf with cooked rice, vegetables, Pāyāsam (sweet porridge), and sweets, apart from a pot of water, a bunch of flowers, Sandalwood paste, and other accouterments for Pūja. Because of the severe hunger pangs, I felt compelled to eat the food. But my better judgment was not to eat it. I thought, "What sins did you commit in the past life? What did drive you in the present life to go to this island and suffer like this? Thinking of appeasing your hunger as more urgent and immediate, your desire to eat the food items laid out by a Mahan for worship will only accrue sin. Therefore, you should not do it." I decided not to eat the food.
9) பசி தாங்கவில்லை.
நாமே பூஜை நைவேத்தியம் முடித்து விட்டுப் பிறகு அந்த உணவைக் கொள்ளலா மென்று நினைத்து ஸ்நானம் செய்ய இடம் கிடைக்குமா என்று பார்க்கும் பொருட்டு வெளியே வந்து சிறிது தூரம் சுற்றிப்பார்த்ததில் அங்கே ஒரு சுனையிருந்தது. அதில் ஸ்நானம் செய்து ஸந்தி முதலிய கர்மங்களை முடித்து விட்டு மறுபடி குடிசைக்குள் போய்ப் பார்க்கையில் பிள்ளையார் மாத்திரந்தானிருந்தது.
சோறு வடை தண்ணீர் பூ சந்தனம் ஒன்றையும் காணவில்லை. எனக்கு வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. "பிள்ளையாரே, பிள்ளையாரே, உமக்கு எங்கள் வேதபுரி சேர்ந்தவுடனே முப்பத்து மூன்று தேங்காய் உடைத்துப் பூஜை செய்கிறேன். எனக்கிந்த ஆபத்து நேரத்தில் உதவி செய்ய மாட்டீரா?" என்று வேண்டி வருத்தப்பட்டேன்.
9. Hunger was intolerable. I thought of performing the Pūja myself, eating the food after a ritual cleansing bath and worship; I ventured outside looking for a water body. I saw a spring, took my ritual bathing, observed other injunctions, went inside the hut, and found only Pillaiyar. The cooked rice, soft fried doughnut (வடை), water, flowers, Sandalwood were missing. My heartburn worsened. "Pillaiyarē! Once I reach Vedapuri, I will, in your honor, break 33 coconuts and perform Pūja. Will you not help during this difficult time?"
10) இந்த நிலையில் எனது கனவு தடைப்பட்டது. பல குழப்பங்களுண்டாயின; செய்தி நினைப்பில்லை. பிறகு மறுபடியும் நான் கடலலைகளின்மீது மிதந்து செல்வது கண்டேன். யுகப் பிரளயம் போலவேயிருந்தது. என் கைகள் புடைத்தன. கண் தெரியவில்லை. பிரக்கினை சரியில்லை. 10. At this juncture, my dream met its interruption. Many confusions roiled me; I have no recollection. Later, I found myself floating on the sea waves. It appeared like the Great Deluge. My hands were trembling; my eyes could not see; my consciousness was obtundent.
11) கடலைத் திவலை திவலையாக உடைத்து நாசம் செய்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் வாயு புடைப்பது போலிருந்தது: அதே சமயத்தில் எனதுடம்பைக் கடலலைகள் பந்தாடின.
என்னுயிரைக் கால தூதர் பந்தாடுவதுபோல் தோன்றிற்று. அப்போது மீண்டும் குல சக்தியின் பெயரை உச்சரித்து, விநாயகரை நினைத்தும் "பிள்ளையாரே, என்னை வேதபுரத்துக் கரை சேர்த்துவிட்டால் உமக்கு மூவாயிரத்து முந்நூறு தேங்காய் உடைக்கிறேன். காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும்" என்று என்னை அறியாமல் கூவினேன்.
11. It appeared that the wind was winnowing the ocean to destroy it drop by drop; at the same time, ocean waves played ball with my body.
The Death's messengers were playing ball with my body, it appeared. I thought of my family deity and Vināyakar and cried out without self-awareness, "Pillaiyarē! I will offer you 3300 coconuts. Please save me, save me."
12) சிறிதுநேரத்துக்குள் புயற் காற்று நின்றது: அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன்னிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போல மெதுவாக என்னருகில் வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீ யொளி போலே விளங்கிற்று. தோணியைக் கண்டவுடனே நான் கை கூப்பினேன். அப்போது தோணிக்காரனிடம் என்னை யேற்றிக் கொள்ளும்படி அவன் கட்டளையிட்டான். அவர்கள் என்னை யேற்றிக் கொண்டனர். 12. In a little while, the cyclone stopped. A golden boat of indescribable beauty with a peacock in the bow sailed towards me like a swan bearing Marakkumāran (? Kandhan or Skanda) in the middle of the boat. His glowing face shone like fire. When I saw the boat, I opposed my palms in homage. He commanded the boatman to take me aboard. I did board the boat.
13) அந்தத் தோணியில் ஏறினவுடனே என் உடம்பிலும், மனதிலுமிருந்த துன்பங்களெல்லாம் நீங்கிப் போயின. என் உடம்பைப் பார்த்தால் ராஜாவுடை தரித்திருக்கிறது. பதினாறு வயது பிள்ளையாகவே நானுமிருந்தேன். தோணியிடையிருந்த மன்னன் கரத்திலே வேல் தெரிந்தது. அப்போது கண்ணை விழித்தேன். வேதபுரத்துக் கடற்கரை, மாலை வேளை; மணல்மீது நான் படுத்திருப்பது கண்டேன்.
நம்பிக்கை யுண்டாகவில்லை. கண்ணை நன்றாகத் துடைத்துப் பார்த்தேன். தீவும், புயற்காற்றும், கனவென்று தெரிந்து கொண்டேன். அந்தத் தீவில் என்னைக் கண்டவுடன் ஓடி மறைந்த பெண்ணின் வடிவம் என் கண் முன்னே நிற்பது போலிருந்தது. பிறகு தோணியிலே கண்ட மன்னன் வடிவம் தெரிந்தது... வீடு வந்து சேர்ந்தேன்
13. When I got into the boat, all aches and pains of the body and mind disappeared. I saw my body clothed in royal robes and appeared like a sixteen-year-old. The king in the boat had a spear in his hand. I opened my eyes to see myself lying on the beach sand on the oceanside of Vedapuram.
I did not believe myself, rubbed my eyes (in disbelief), took another look, and realized that the island and the cyclone were a dream. The Island Palace girl, who ran away from me twice in the dream, appeared to stand before me. Later, I visualized the king in the boat. I came back home.
14) வேதபுரத்தில் மௌனச் சாமியார் என்றொருவர் இருக்கிறார். அவரிடம் கனவைச் சொல்லி, அந்தத் தீவிலே கண்ட பெண் யாரென்று கேட்டேன். "உன்னை யார் காப்பாற்றியதென்பதை நீ அறியவில்லை. அந்தப் பெண் உன்னிடம் அன்பு கொண்டாள்.
இரண்டாம் முறை தோணியிலே தோன்றிய இளவரசன் கையில் ஒரு வேல் இருந்தது கண்டனையா? அதுவே உனக்குப் பெண்ணாகத் தோன்றிற்று. உன்னைக் கவலைக் கடலில் வீழ்த்திய பெண்ணே பிறகு வேலாகத் தோன்றி உன்னைக் காத்தாள்" என்று சொன்னார்.
சக்தியே வேலென்றும் அதுவே உயிருக்கு நல்ல துணையென்றும் தெரிந்து கொண்டேன். சீக்கிரத்தில் நல்ல நாள் பார்த்து வேதபுரத்திலுள்ள ஏழைப் பிள்ளையாருக்கு மூவாயிரத்து முந்நூறு தேங்காய் உடைக்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறேன்.
14. I went to the Mauna Swamy in Vedapuram and asked him to interpret my dream, mainly the girl. The Swamy: "You did not know who rescued you. That girl had a love for you. Did you notice the spear the prince had with him on the boat? That spear was the girl in the palace lawn. That girl cast you in the ocean of misery appeared like a spear, and rescued you.
I learned that Sakthi is the spear and a companion to life and soul. Soon, I decided to offer on an auspicious day 3,300 coconuts to the poorest Pillaiyar in Vedapuram.

 

 

17. கடற்கரையாண்டி 17. Seaside Monk
1) ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின் மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின. வடகீழ்த் திசையிலிருந்து சில்லென்ற குளிர்ந்த காற்று வீசிற்று.  1. At noon one day, I sat on the beach sand opposite the waves. Since it was a cloudy day, the sand was not hot. Just like the doubts hide the Jñāṇa, the clouds blocked the sunlight. The waves crashed before me, and a cool wind was blowing from the north-east.
2) குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும் போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளி நாட்டு வியாபாரக் கப்பல் வந்து நின்றது. நானும் பொழுது போகாமல், ஒரு தோணிப்புறத்திலேயிருந்து கடலையும் அலையையும் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தேன். 'அடா! ஓ-யா-மல், ஓயாமல், எப்போதும் இப்படி ஓலமிடுகிறதே! எத்தனை யுகங்களாயிற்றோ! விதியன்றோ! விதியன்றோ இந்தக்கடலை இப்படியாட்டுவது? விதியின் வலிமை பெரிது. 2. Blinding sunshine fell on the ocean and caused slight photophobia. Some distance away, a foreign commercial vessel stood still in the waters. I was thinking about the sea and its waves. Adadā, The ocean constantly and with no rest, makes the sound for so many Yugas. What a fate! Fate, moving this ocean, has greater power than the ocean.
3) 'விதியினால் அண்டகோடிகள் சுழல்கின்றன. விதிப்படியே அணுக்கள் சலிக்கின்றன. மனுஷ்யர், தேவர், அசுரர் முதலிய பல கோடி ஜீவராசிகளின் மனங்களும், செயல்களும் விதிப்படி நடக்கின்றன. இந்த சூரியன் விதிக்குக் கட்டுப்பட்டிருக்கிறான். மேகங்களெல்லாம் விதிப்படி பிறந்து, விதிப்படி யோடி, விதிப்படி மாய்கின்றன. இவ்வாறு யோசனை செய்து கொண்டிருக்கையிலே அங்கொரு யோகி வந்தார். 3. Fate makes millions of worlds spin. The atoms obey fate. Men, gods, Asuras, the minds of millions of living things and their deeds, the sun, the clouds obey the dictates of fate or destiny. As I was deep in my thought, a Yogi came near me.
4) "விதியைப்பற்றி யோசனை செய்கிறேன்" என்றேன்.
"யாருடைய விதியை?" என்று கேட்டார்.
"என்னுடைய விதியை, உம்முடைய விதியை; இந்தக் கடலின் விதியை, இந்த உலகத்தின் விதியை" என்று சொன்னேன். அப்போது கடற்கரையாண்டி சொல்லுகிறார்:
"தம்பி, உனக்கும், கடலுக்கும், உலகத்துக்கும் விதி தலைவன். எனக்கு விதி கிடையாது; ஆதலால் உங்கள் கூட்டத்தில் என்னைச் சேர்த்துப் பேசாதே" என்றார்.
"எதனாலே?" என்று கேட்டேன்!
அப்போது அந்த யோகி மிகவும் உரத்த குரலில், கடலோசை தணியும்படி பின்வரும் பாட்டை ஆச்சரியமான நாட்டை ராகத்தில் பாடினார்.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில்; தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல் பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கைகொழுந்தே!
4. I told him, "I am thinking about fate (destiny). The Yogi: 'Whose?"
I said, "Of my destiny, your, this ocean, the world."
The seaside Yogi: Brother! Destiny is the controlling entity of you, the ocean, and the world. I have no destiny. Therefore, do not include me in your category."
"Why so?"
The Yogi loudly sang the poetry above the sound of the ocean in a beautiful manner.
The poem by Arunagirinathar was sung by the Yogi.
Translation from Tamil to English by Ramachander
The field filled orchards of Thiruchendur were destroyed by the Chel fishes in tanks,
The mind of tender creeper like maidens were destroyed because they wished for,
The honey dripping garlands of Kadamba flowers which were worn by the Lord,
The sea, the Krouncha mountain, and Soorapadma were destroyed by his Vel,
And the fate writings on my head were destroyed by the touch of the feet of the Lord. 40
5) கந்தரலங்காரத்தில் நான் பலமுறை படித்திருக்கும் மேற்படி பாட்டை அந்த யோகி பாடும்போது, எனக்கும் புதிதாக இருந்தது. மேலெல்லாம் புளகமுண்டாய்விட்டது. முதலிரண்டடி சாதாரணமாக உட்கார்ந்து சொன்னார். மூன்றாவது பதம் சொல்லுகையில் எழுந்து நின்று கொண்டார். கண்ணும், முகமும் ஒளிகொண்டு ஆவேசம் ஏறிப் போய்விட்டது. "வேல் பட்டழிந்தது வேலை (கடல்)" என்று சொல்லும்போது சுட்டு விரலால் கடலைக் குறித்துக் காட்டினார். கடல் நடுங்குவதுபோல் என் கண்ணுக்குப் புலப்பட்டது.
பிறகு சொன்னார்:
தெய்வத்தின் வேலாலே கடல் உடைந்தது. மலை தூளாய்விட்டது. சூரபத்மன் சிதறிப்போனான். அந்த முருகனுடைய திருவடி என் முடிமீது தொட்டது, நான் விடுதலை கொண்டேன். விடுதலைப் பட்டது பாச வினை விலங்கே."
5. Though I read Kandhar-alangaram several times, the Yogi's singing made it appear new, causing goosebumps on me. The first two lines, he sang sitting, and the third one, standing up. His eyes and face brightened, and the tempo heightened. When he said, 'By the touch of the spear, the sea perished, he pointed the sea with his index finger. To me, the sea appeared quivering. By God's spear, the ocean broke, and the mountain became powdery. Sūrapadman shattered. That Murugan's holy feet touched my coiffure, and I realized liberation. The liberated (being) is the bonded beast.
6) இங்ஙனம் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் மழை வந்துவிட்டது. நானெழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். அவர் அப்படியே அலையில் இறங்கி ஸ்நானம் செய்யப் போனார். நான் மணலைக் கடந்து சாலையில் ஏறும்போது, கடற்புறத்திலிருந்து சிங்கத்தின் ஒலி போலே, 'விடுதலை; விடுதலை; விடுதலை' என்ற ஒலி கேட்டது.
6. As he talked, the rains poured, and I got up to leave for home. The Yogi went to the sea to bathe in its waves. As I crossed over from the sand to the road, like a roaring lion's sound, ' Freedom, freedom,' boomed at a distance

 

 

18. செய்கை 18. Deed
1) வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்ரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தினமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது. அன்று காலையில் சுவாமிக்குப் பலவிதமான அபிஷேகங்கள் நடந்தன. சந்தனாபிஷேகம் நடக்கும் சமயத்தில் நான் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தேன். எனக்கு முன்னாகவே என்னுடைய சிநேகிதர் பிரமராய அய்யர் அங்கு வந்து தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தார். 1. Vedapuram had a Siva temple, the premier deity of which was God Subramaniya. The servitors and devotees performed the ritual of installing the gem-laden spear on the past Monday evening. Those morning ritual ablutions of all kinds took place, including Sandal paste application to the deity's idol. That was when I arrived at the temple's sanctum. My friend Brahmaraya Aiyar came earlier and received Darsan of the deity. 1
2) "சூரபத்மனை அடித்த உஷ்ணம் அமரும் பொருட்டாக எம்பெருமான் சந்தனாபிஷேகம் செய்து கொள்ளுகிறான்" என்று பிரமராய அய்யர் சொன்னார். அங்கே ஒரு பிச்சி (பித்துப் பிடித்துக் கொண்டவள் போலே காணப்பட்ட பெண்) வந்து கந்தர் ஷஷ்டி கவசம் சொல்லிக்கொண்டு சந்நிதியிலே நின்று நர்த்தனம் செய்தாள். இந்த வினோதமெல்லாம் கண்டு பிறகு தீபாராதனை சேவித்துவிட்டு நானும் பிரமராய அய்யரும் திருக்குளத்துக்கரை மண்டபத்திலே போய் உட்கார்ந்தோம். 2. Brahmaraya Aiyar: "Emperuman (Subramaniya Swamy) takes the sandalwood paste Abhishekam to cool down the heat from the killing of Surapadman. A crazy-looking woman danced and sang Kandhar Shashti Kavacam in the sanctum. After witnessing the waving of the lights, Aiyer and I sat inside the Mandapam adjoining the sacred pond. 2
3) அங்கே விடுதலையைப் பற்றி பிரமராய அய்யர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். பிறகு நாட்டியத்தைப் பற்றிக் கொஞ்சம் சம்பாஷணை நடந்தது. சங்கீதத்தில் நம்மவர் தற்காலத்தில் சோக ரசம், சிங்கார ரசம் என்ற இரண்டு மாத்திரம் வைத்துக் கொண்டு மற்ற ஏழையும் மறந்துவிட்டது போல, நாட்டியத்திலும் சோகம் சிங்காரம் இரண்டுதான் வைத்திருக்கிறார்கள். மற்ற ஏழும் ஏறக்குறைய கிருஷ்ணார்ப்பணம் dedicating them to Sri Krishna என்று பலவிதமாகப் பேசினார். 3. Aiyar questioned me about the freedom of India from British rule. We talked about the dance. In music, nowadays, only two Rasas are in vogue, and the other seven are out of favor. Likewise, in dance, Sōkam and Singāram are in popularity, and the other seven are dedications to Krishna (= not in vogue). 3
4) "நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாசிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன்சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம். கணபதி, முருகன், சக்தி முதலிய தெய்வங்களுக்கெல்லாம் தனித்தனியே பிரத்தியேகமான Separateness; singleness Peculiarity, singularity
கூத்து வகைகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. கவலையை வெல்லுதல் குறி. கவலை நீங்கினால் ஆட்டமும் பாட்டமும் இயற்கையிலே பிறக்கும். பூர்வீக ராஜாக்கள் அனுபவித்த சுகமும் அடைந்த மேன்மையும் இக்காலத்தில் இல்லை. ராஜயோகியானால் அவனுக்கு நாட்டியம் முதலிய தெய்வக்கலைகள் இயற்கையிலே சித்தியாகும்."
4. Dance was a highly regarded work in ancient times by the kings, the Bakthas, Kannan (on the head of the snake), and Nataraja (in the hall of Wisdom). Now only, Dāsis do it in our nation.
Sastras tell that Ganapathy, Murugan, and Sakthi individually had dance dramas. Overcoming trouble is noteworthy. Removal of trouble naturally leads to dance and singing. The pleasures enjoyed by ancients kings and greatness are absent nowadays. On attainment of becoming a Rajayogi, dancing as the divine art comes to him naturally. 4
5) இங்ஙனம் பிரமராய அய்யர் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு மேற்படி கோயில் தர்மகர்த்தாவாகிய வீரப்ப முதலியாரும் வந்து சேர்ந்தார். வீரப்ப முதலியார் நல்ல தீரர்; பல பெரிய காரியங்களை எடுத்துச் சாதித்தவர். இவருடைய குமாரன் மகா வீரனென்று போர்க்களத்தில் கீர்த்தியடைந்திருக்கிறான். இவர் வந்தவுடனே சம்பாஷணை கொஞ்சம் மாறுபட்டது. ஏதேதோ விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டு வந்து ஆளுக்கொன்று வீதம் கொடுத்தான். அதென்ன காகிதமென்றால், அன்று மாலை கோயிலில் நடக்கப்போகிற பெரிய பாளையம் மடாதிபதியின் உபந்நியாசத்துக்கு எல்லாரும் வந்து "சிறப்பிக்க வேண்டும்" என்ற அழைப்புக் காயிதம் 5. As Brahmarayar talked, The Dharma Kartha Virappa Mudaliyar, a hero with many accomplishments, joined us. His son earned accolades and the title of hero in the military. With Mudaliyar coming into the mix, the direction of the conversation changed. A temple worker came in with many yellow papers and handed one piece to each person. It was a temple invitation to the people to attend the Periyapalayam Matathipathi's lecture that evening. 5
6) அந்தக் காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின்வருமாறு:
தோகை மேல் உலவும் கந்தன்
சுடர்க் கரத்திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவ தெமக்கு வேலை.
(மயிலின் மேலே உலவுகின்ற கந்தனுடைய கையில் வெற்றி மாலை சூடி நிற்கும் வேலாயுதத்தை வணங்குவதே நம்முடைய தொழில்.)
இவ்விரண்டு பாதங்களையும் படித்துப் பார்த்துவிட்டு பிரமராய அய்யர் "நல்ல பாட்டு" என்றார். வீரப்ப முதலியார் பின்வருமாறு பிரசங்கம் செய்யலானார்:
"கேளும் காளிதாஸரே, பிரமராய அய்யரே, நீரும் கேளும். தெய்வத்தைப் போற்றுவதே நம்முடைய வேலையென்றும், அதைத் தவிர நமக்கு வேறு எவ்விதமான தொழிலும் கிடையாதென்றும் சொல்லிக் கொண்டிருப்போர் சோம்பரில் முழுகிப் போய்த் தம்முடைய வாணாளையும் வீணாகச் செய்து பிறரையும் கெடுக்கிறார்கள். செய்கை பிரதானம். செய்கையை விடுதல் பாவம். கடவுள் நமக்கு ஐம்புலன்களையும், அறிவையும் கொடுத்து எப்போதும் உழைப்பினாலேயே தனக்கும் பிறர்க்கும் நன்மை தேடும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு மாறாகச் செய்கையற்றுச் சும்மா இருப்பதை இன்பமென்று நினைப்போர் நாசத்தை அடைவார்கள். தெய்வம், கிய்வம் எல்லாம் வீண் பேச்சு. வேலை செய்தவன் பிழைப்பான்; வேலை செய்யாதவன் செத்துப் போவான்" என்றார்.
6. The invitation included a text with the last two sentences: On the feathers riding Kandhan, effulgent hand holding the victory garland. Our work is to worship the spear decorated with the victory garland.
(Kandhan, riding the peacock, holds the spear that wears the victory garland. Our work is to worship the spear.
Brahmarayar reading these two lines of poetry, commented, "Good poem." Virappa Mudaliyar gave the following lecture.
''Hear me Kalidasare & Bramaraya Aiyare! The lazy ones, advocating that we are here on the earth only to praise God, are wasting their and our lives. Action is essential; inaction is sin. God gave us five motor organs and intellect to work and earn goodness for ourselves and others by hard work. Inact ion and laziness as joy will bring destruction for them. God-talk is a waste. The worker lives, and the lazy one will die." 6
7) அப்போது பிரமராய அய்யர்:
"சோம்பேறி தெய்வத்தின் பெயரை ஒரு முகாந்தரமாகக்
cause, reason, ground of action, motive காட்டித் தன்னுடைய சோம்பலை ஆதரிப்பதாகச் சொன்னீர்கள்; இருக்கலாம். அதனாலே தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையிலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களையெல்லாம் நடத்துகிறான். இது மறுக்க முடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி: இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லையென்றும் தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்து கொண்டு நடக்கும் பெரியோர் சோம்பலிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்னியைப் போலே தொழில் செய்வார்கள். எப்போதும் ஆனந்தத்திலே இருப்பதனால் அவர்களிடம் அற்புதமான சக்திகள் பிறக்கும். அந்த சக்திகளைக் கொண்டு அவர்கள் செய்யும் தொழில் உலகத்தாருக்குக் கணக்கிட முடியாத நன்மைகளைச் செய்யும். பகவான் கீதையிலே என்ன சொல்லுகிறார்? தெய்வமே செய்கிறது. தான் செய்வதாக நினைப்பவன் மூடன். ஆதலாலே முன்பின் யோசனை செய்யாமல் அப்போதப்போது நேரிடும் தர்மத்தை அனல் போலே செய்ய வேண்டும். ஆதலால், ஹே அர்ஜுனா!


வில்லினை யெடடா-கையில் 1
வில்லினை யெடடா-அந்தப்  2
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!  3
வாடி நில்லாதே- மனம்  4
வாடி நில்லாதே-வெறும்  5
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே!  6
ஒன்றுள துண்மை-என்றும்  7
ஒன்றுள துண்மை-அதைக்  8
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது!  9
துன்பமுமில்லை-கொடுந்  10
துன்பமுமில்லை-அதில்  11
இன்பமுமில்லை பிற பிறப் பில்லை!  12
படைகளுந் தீண்டா-அதைப்  13
படைகளுந் தீண்டா-அனல்  14
சுடவு மொண்ணாது புனல் நனையாது!  15
செய்தலுன் கடனே-அறம்  16
செய்தலுன் கடனே-அதில்  17
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காத  18
வில்லினை யெடடா  19
என்று பகவான் சொன்னார்.
ஆதலால் பகவானுக்குத் தொழிலே பொறுப்பில்லை. ஆனால் தொழிலுண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப்படும் உண்மையான தெய்வ பக்தி யுடையவர்கள் செய்யும் செய்கையினால் கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்கு வேண்டியதில்லையென்று உதறி விட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக் கொண்டு மகத்தான செய்கைகளைச் செய்வான்" என்று பிரமராய அய்யர் சொன்னார். (7)
7. Brama Aiyar said, "The lazy one, citing God as the goal, supports his laziness. It may be true. It is a crime to blame God-believing people with inaction as sluggards. Truth is not like that. Nature, by its strength and policy, conducts the activities of men. It is an undeniable truth. The person who realizes this is a Jñāṉi. A sage does not indulge in laziness because he knows that he is not responsible for his acts, but only God is responsible for his acts. Their work is like that of fire. Since they are full of ecstasy, they beget great powers, with which their acts bring immense and incalculable benefits to the world. Bhagavan says in Gita, "God does all acts. He who thinks he does the act is an ignoramus. One should perform one's Dharma with no forethought, like Agni."
Therefore, O Arjuna!

Below is the poem,  difficult to translate.


Take the bow in your hand  1

Take the bow- That  2

The mediocre crowd, render into dust  3

Don't stand fainthearted ― mind  4

Don't stand fainthearted ― merely  5

Babble not female Wisdom, utter not!  6

Prevailing evil ― always  7

Prevailing evil ― it  8

Will not die Will not diminish  9

Grief none ― severe  10

Grief none ― in it  11

Joy none No future births!  12

The army will touch not ― That (the soul)  13

The army will touch not ― Fire (will not burn the soul)  14

Burn not Water will not wet (the soul)  15

Doing, debt ―righteousness  16

Doing, debt ― in it  17

Coming fruits think not  18

Take the bow  19

So said Bhagavan (Krishna to Arjuna on the battlefield).

"Therefore, the action does not afflict Bhagavan. But action is ever-present, given by God. Krita Yoga comes into being because of the action done by the truly devoted people. When they reject all acts, Bhagavan uses them as instruments and do great acts." Brahma Aiyar finished talking. (7)
8) அப்போது வீரப்ப முதலியார் என்னை நோக்கி "உமது கருத்தென்ன?" என்று கேட்டார். நான் "எனக்கெனச் செயல் யாதொன்றுமில்லை" என்ற முன்னோர் பாடலை எடுத்துச் சொல்லி, சக்தி நாமத்தைக் கூறி "நான் செய்கையற்று நிற்கிறேன். பராசக்தி என் மூலமாக எது செய்வித்தாலும் அவளுடைய இஷ்டமே யன்றி என்னுடைய இஷ்டமில்லை" என்றேன். 8. Virappa Mudaliyar looked at me and said, "What is your opinion?" I said, "For me, there is no act. Mentioning the name of Sakthi, I stand inactive. All acts of mine proceed from Sakthi, which is her desire and not mine." 8
9) இந்தச் சமயத்தில் தண்டபாணிக்குப் பூஜை நடந்து தீபாராதனையாய்க் கொண்டிருப்பதாக ஒருவன் வந்து சொன்னான். எல்லாரும் எழுந்து சேவிக்கப் புறப்பட்டோம். சபை கலைந்தது.
9. At that time, a messenger told us that Dandapani Pujai and waving of lights were in progress. We all got up and went for Darsan. The meeting ended. 9